எமது இயக்கத்துடன் இணைய (To Join)

Deprecated: Function create_function() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-content/plugins/wp-spamshield/wp-spamshield.php on line 2033

உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கியது தொழில்நுட்பம். அதே நேரத்தில் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாம் தனித் தீவுகளாய் மாறிப் போய்விட்டோம்! இங்கே இருக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் யாரோ சிலரைக் குறை சொல்லிக் கடந்து போவதால் ஒரு பயனும் இல்லை.

கல்வி, வேலை, மருத்துவம், விலைவாசி – என நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும்
அரசியலும் அதன் கொள்கைகளும் தீர்மானிக்கின்றன. ‘அரசியல் சாய்க்கடை’ என்று ஒதுங்கிப்
போவதாலோ, விலகி நிற்பதாலோ பயனில்லை. அரசியல் கொள்கைகளைப் புரிந்துகொண்டு அதை விவாதிப்பதிலிருந்துதான் தவறான கொள்கைகளை அடையாளம் காண/காட்ட முடியும்; மாற்றுக்  கொள்கைகளை கண்டறிய முடியும். அந்த மாற்றுக் கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டால் பின் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

அரசியலைப் புரிந்துகொண்டு, அரசியல் கொள்கைகள் குறித்து உரையாடி, சரி தவறைக் கண்டறிந்து அதை மக்களிடம் கொண்டு செல்கின்றோம். நம்மைப் போன்றவர்களுக்குக் கிடைத்துள்ள  தொழில்நுட்ப அறிவும், வாய்ப்புகளும் இதற்குத் துணை செய்கின்றன. நம்மை உருவாக்கிய இந்தச் சமூகத்திற்கு நமது நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். போராடும் மக்களுக்குத் துணை நிற்கின்றோம். இதை எமது தார்மீகக் கடமையாகக் கருதுகின்றோம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகச் செயல்படத் தொடங்கி இன்று சில நூறு பேராகப் பெருகியுள்ளோம். ஆறு ஆண்டுகள் செயல்பட்டு, ஏழாம் ஆண்டில் நடை போடுகின்றோம். கூட்டுச் செயல்பாட்டின் பலனை இந்த இயக்கத்தின் மூலம் கண்டு வருகின்றோம். வாருங்கள் நண்பர்களே! தனிமரம் தோப்பாவதில்லை. வரலாற்றைத் தீர்மானிப்பது ஒன்றிரண்டு தனி மனிதர்கள் அல்ல; நம்மைப் போன்ற மக்களே!


உறுப்பினர் படிவத்தினை சமர்ப்பிக்கும்போது, தாங்கள் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறினை சந்தித்தால், கீழ்காணும் மின்னஞ்சலையோ, தொலைபேசி எண்ணையோ, முகநூல் பக்கத்தையோ தொடர்பு கொள்ளவும்:
மின்னஞ்சல்: ilanthamizhagam@gmail.com
தொலைபேசி: +91-9894763812, +91-8939661119, +91-9840880737

 

No Fields Found.

தொடர்பு கொள்ள :

மின்னஞ்சல் : ilanthamizhagam@gmail.com
முகவரி : 42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி, சென்னை – 600042
கைப்பேசி : +91-9894763812, +91-8939661119, +91-9840880737