கதையாடிகள்‬

kathaiyaadigal2

 

கதையாடிகளோடு இணைய

கதையாடிகளோடு கதையாட‌ வாரீர்

பேசத் தெரிந்த மொழியின் அடுத்த நகர்வு, எழுத்து.

எழுத்து இலக்கியமாகும் போது அது வாழ்வியலை கை கொள்கிறது. சமூக எதார்த்தத்தை எழுதுகிறது. வாழ்வியல் அபத்தங்களைப் பேசுகிறது. போராட்டங்களை பதிவு செய்கிறது. வரலாறுகள் இலக்கியமாவதும், இலக்கியங்கள் வரலாறுகள் ஆவதுமான‌ விளையாட்டு  தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மரபிலக்கியமும் நமக்கு முக்கியமானது.  சமகாலத்தின் நவீன இலக்கியமும் முக்கியமானது.  இவ்விரண்டுக்குமான இடைவெளி என்ன ?  மரபிலக்கியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிற‌ நம்மால் நவீன இலக்கியங்களை விளங்கிக் கொள்ள ஏன் இவ்வளவு மெனக்கெட‌ வேண்டியிருக்கிறது ? மொழியின் அடுக்குகள் என்ன ?  வாசிப்பின் அடுக்குகள் என்ன ?  தமிழ் இலக்கியச் சூழலில் நவீன இலக்கியத்தின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது ?

இலக்கியம் எனும் கலை வெறும் பொழுது போக்கு மட்டுந்தானா ?   இலக்கியம் மனித சமூக வாழ்வியலின் எதார்த்தத்தை மட்டும் தான்   பிரதிபலிக்க வேண்டுமா ?  மிகைக் கற்பனாவாதமும் அதிபுனைவுகளும் கதைகளின் ஒரு பரிமாணம் ஆகாதா ?  நவீனக் கவிதைகளின் மொழியடுக்குகளை எங்கனம் புரிந்து கொள்வது ?   சமூக அரசியல் வரலாற்றில் இலக்கியத்தின் பங்கு என்ன ?

வாருங்கள் கதைப்போம் !

கதையாடிகள் கதை பேசுபவர்கள் மட்டுமல்ல.  இலக்கிய வாசிப்பின் நுட்பங்களை அறியும் தேடலை கனவாகக் கொண்டிருப்பவர்கள்.  இலக்கியம் என்பது ஒரு பொழுது போக்கு கலை அல்ல.  அது வாழ்வியல்.  சமூக அரசியல் மாற்றங்களை இலக்காக கொண்டிருப்போரின் தவிர்க்க முடியாத ஒரு கைக்கருவி என்பதை அறிந்தவர்கள்.

சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் ஆகிய இலக்கிய வடிவங்கள் குறித்து உரையாட,  வாசிப்பனுபவத்துக்கும் கற்றலுக்குமான எல்லைகளைப் புரிந்து கொள்ள “கதையாடிகள்” இலக்கியச் சந்திப்பை, இளந்தமிழகம் இயக்கம் மாதந்தோறும் நடத்துகிறது.

தொடர்பு எண் : +91-9003078956 (செய்யது)

கதையடிகள் முகநூல் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *