காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! – இளந்தமிழகம் ஆதரவு

காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!

முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர் !

காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு!

 

காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் இன்று (02.04.2018) சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தலைவர் திரு. சீமான்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன்,

மனித நேய சனநாயக கட்சி தலைவர் திரு. தமிமுன் அன்சாரி,

கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு. உ. தனியரசு,

எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. தெகலான் பாகவி,

தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர் மு. களஞ்சியம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன்,

தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. சி. முருகேசன்,

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு,

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் வினோத்,

தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் தோழர் தமிழ்நேயன்,

இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி,

தமிழக மக்கள் சனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,

தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன்,

இந்திய சனநாயக கட்சி பொது செயலாளர் திரு. செயசீலன்,

தன்னாட்சித் தமிழகம் திரு. ஆழி செந்தில்நாதன்,

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர் வினோத்குமார்,

மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன்,

மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செ. முத்துப்பாண்டி,

பச்சைத் தமிழகம் செய்தித் தொடர்பாளர் தோழர் யா. அருள்தாஸ்

உள்ளிட்ட அரசியல் அமைப்புப் பொறுப்பாளர்களும்,

தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன்,

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன்,

சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் திரு. பழனிராசன்,

நெடுவாசல் போராட்டக் குழு தோழர் நெடுவை திருமுருகன்,

தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் க. திருநாவுக்கரசு,

த.வி.ச. திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை

உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புப் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காவிரிச் சிக்கலில் தொடர்ந்து தமிழின விரோதத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென இக்கூட்டத்தில், ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் கனிம வளமான நெய்வேலி நிலக்கரியை சுரண்டிக் கொண்டுள்ள இந்திய அரசைத் தடுக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சகத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் வரும் 10.04.2018 – செவ்வாய் அன்று நெய்வேலி நிலக்கரி நிலையத்தை அனைத்து இயக்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து முற்றுகையிடுவதென முடிவெடுக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக, இந்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுப்பது, தமிழ்நாட்டுக்கு வரும் இந்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது, இந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என பல்வேறு வடிவங்களில் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை விரிந்த தளத்தில் நடத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இளந்தமிழகம் சார்பாக  அதிமுக, பாசக கட்சிகளை தவிர்த்து, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும், உழவர் அமைப்புகளும், வணிகர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு முழுமனதாக ஆதரவு தெரிவிப்பதுடன் அவற்றில் ஆங்காங்கே பங்கேற்கவும் தோழமை அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கிறேம்.

தமிழினமே! காவிரி உரிமைக்காக அணிதிரள்க!

cauvery

இராசன் காந்தி 

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *