ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – கருத்தரங்கம்

 

ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – கருத்தரங்கம்

 

குஜராத் வளர்ந்துவிட்டதாக பொய்யான மாயையை உருவாக்கிய பிஜெபி, அதை வைத்து 2014 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது, நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த நாளில் இருந்து, நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக, குஜராத்தில்  செய்தது போல் பொய் பிரச்சாரம் செய்கிறது. அதற்கேற்ப மோடி அரசு கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்களையே வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுவதாக பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், நடைமுறையில் மோடி அரசால் கொண்டு வரப்படும் திட்டங்களாலும், சட்டங்களாலும் மக்கள் அன்றாடம் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும் பா.ச.க அரசின் திட்டங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையாக இருக்கலாம்; ஜிஎஸ்டி வரியாக இருக்கலாம்; மாடுகளை விற்பதற்கான தடையாக இருக்கலாம்; மக்கள் விரோத திட்டங்களுக்கு கொடுக்கப்படும் அனுமதியாக இருக்கலாம், இதில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்.

மக்கள் விரோதத் திட்டங்கள் ஒருபுறம் என்றால், சிறுபான்மை மக்களின், தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்கும் சதிகள் மறுபுறமுமாக இயங்குகிறது மோடி தலைமையிலான மதவாத அரசு.

இப்படி இருக்கும் அரசியல் சூழலில், மோடி அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி, நீட், இந்தித் திணிப்பு போன்றவற்றின் பின்னிருக்கம் மக்கள் விரோத அரசியலை விளக்க,

“ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – புதிய இந்தியா பிறந்துவிடுமா?!” கருத்தரங்கம் ஒன்றை இளந்தமிழகம் இயக்கம் சார்பில் ஒருங்கிணைத்துள்ளோம்.

கருத்துரை வழங்குபவர்கள் : –

மருத்துவர் எழிலன்

ஒருங்கிணைப்பாளர், இளைஞர் இயக்கம்

முனைவர் வித்யாசாகர்

பொருளியல் ஆய்வாளர், அகில இந்திய மக்கள் மேடை

திருமிகு கோவி.லெனின்

பொறுப்பாசிரியர், நக்கீரன் இதழ்

தோழர் க. அருணபாரதி

தலைமைச் செயற்குழு, தமிழ்த் தேசியப் பேரியக்கம்

தோழர் ராசன் காந்தி

ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்

இடம் – பெரியார் திடல், எழும்பூர், சென்னை

நாள் – 15, சூலை 2017. சனிக்கிழமை மாலை 5 மணி.

அமைப்பு தோழர்களும், தோழமை இயக்க, ஊடக நண்பர்களும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 EPoster

இங்ஙனம்,

ராசன் காந்தி

ஒருங்கிணைப்பாளர்,

9840880737

இளந்தமிழகம் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *