இளந்தமிழகம் இயக்கம் பொதுக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

இளந்தமிழகம் இயக்கம் 2008 தமிழகத்தில் நடந்த ஈழப்போராட்டத்தின் போது தன்னெழுச்சியாக அணிதிரண்ட தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் சில நடுத்தர வர்க்க இளைஞர்களால் ‘சேவ்தமிழ்ஸ்’ குழுவாக முதலில் உருவானது.

2009 மே 18 ஈழத்தில் போர் முடிந்தபோது ஈழத்தமிழர் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும் உரிமைகள் ஏதுமற்று இருக்கிறோம், அதனால் நமது குரல்கள் தில்லிக்குக் கேட்கவில்லை என்பதை உணர்ந்து‘சேவ் தமிழ்ஸ்’ இயக்கமாக எமது பணியைத் தொடர்ந்தோம். 2011 முதல் பொதுக்குழு, செயற்குழு கட்டமைப்புடன் எமக்கான கொள்கையை வகுத்து செயல்பட்டுவருகிறோம்.

’வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ என்கிற ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வரலாற்றை ஆவணப்படமாக எடுத்தது, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பரப்புரை, காவிரி முல்லைப்பெரியாறு நீர்உரிமை, தாதுமணற்கொள்ளை, மீத்தேன் திட்ட்த்திற்கெதிரான எமது செயல்பாடுகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. நூற்றுக்கணக்கான நடுத்தர வர்க்க இளைஞர்களை எமது அமைப்பை நோக்கி வந்துசமூக அரசியல் பணியாற்றி வருகிறார்கள்.

2014 சூலை மாதம் முதல் எங்களது கொள்கையை கொள்கை அறிக்கையாக வெளியிட்டு ‘சேவ் தமிழ்ஸ் இயக்கம்’ என்கிற ஆங்கிலப் பெயரை மாற்றி ‘இளந்தமிழகம் இயக்கமாக’ இப்போதுசெயல்பட்டுவருகிறோம்.

இதற்கிடையே, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில், கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPML) மக்கள் விடுதலை என்கிற கட்சியில் தன்னைஇணைத்துக்கொண்டு அதன் அரசியல் தலைமைக்குழு தலைவர்களில் ஒருவராக செயல்பட்டது, அதற்காக இயக்கத்தில் ஆள் பிடித்தது, நிதி திரட்டியது, இளந்தமிழகம் இயக்க வேலையைத்தொய்வடையச் செய்து உறுப்பினர்களை கட்சி வேலையை மட்டும் செய்ய வைத்தது, முடிவுகளில் தலையிட்டது போன்றவற்றை கடந்த 2016 சூன் மாதம் அறிந்தோம்.

செந்தில் மற்றும் அவரோடு கட்சியில் இணைந்தவர்கள் 2 வாரத்தில் விளக்கம் தருவதற்கு கால அவகாசம் கோரிக்கை வைத்ததால், அதே மாதம் 26ம் நாள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டினோம்.அதில் இயக்கத்தின் தொடர் செயல்பாடுகருதி சில முடிவுகளுக்கு வந்தடைந்தோம். அமைப்பு சட்ட விதியில், வேறு கட்சியில் இணைந்தவர்கள் (முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்)அமைப்பின் முடிவெடுக்கும் பொதுக்குழு உறுப்பினராக முடியாது என்கிற தீர்மானத்தைக் கொண்டுவந்தோம். தீர்மானத்தை ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களால்  நிறைவேற்றப்பட்டது  அதன்அடிப்படையில், CPML கட்சியில் இருந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி இளந்தமிழகம் இயக்கத்தின் பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டு  பொதுக்குழு உறுப்பினர்களாக மட்டும் தொடர்வதாகசொன்னதால், பொறுப்பாளர்கள் யாரையும் மாற்றாமல், இந்த பிரச்சனையை அத்தோடு முடித்து, இயக்கப்பணியைத் தொடர முடுவெடுத்தோம்.

ஆனால் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது தாங்கள் கட்சியில் தான் இருப்போம், தாங்கள் தான் இந்த இயக்கத்தைத் உருவாக்கினோம், இது தங்கள் சொத்து, பொதுக்குழுவோ அமைப்பு சட்ட விதியோதங்களை எதுவும் கேட்க முடியாது என்றும், உச்சபட்சமாக அமைப்பையே கட்சி தான் உருவாக்கியது என்ற பொய்யினை அமைப்பின் அணைத்து மட்டத்திலும் பிரச்சாரத்தை முன்னெடுத்து இளந்தமிழகம் இயக்கத்தை முழுமையாக முடக்கினார்கள்.

இந்நிலையில், தொடர்ச்சியான செயல்பாட்டை நோக்கி அமைப்பை வழிநடத்த, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து நவம்பர் 19 அன்று கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில்,சூன் 26 தீர்மானத்தின் படி CPML கட்சியில் இருந்து வெளியில் வராமல், கட்சியில் இன்னமும் நீடிக்கும் 10 பேரை பொதுக்குழுவில் இருந்து நீக்கி உறுப்பினர்களாகத் தொடரச் சொல்வதென முடிவுசெய்தோம். தற்காலிகமாக ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கி, அதில் வேறு கட்சியில் இல்லாதவர்களைக்கொண்டு செயல்படப்போவதாக செந்தில் தரப்பிடம் முன்வைத்தோம். பொதுக்குழு முடிவைஏற்காமல், 2017 சனவரி 7ல் ஒரு கூட்டத்தைக் கூட்டி, 49 பொதுக்குழு உறுப்பினர்களில் வெறும் 14 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து, சூன் 26 ஏகமனதாக நிறைவேறிய அமைப்பு சட்ட விதியைநீக்கியதாக அறிவித்தார்கள். பொதுக்குழுவிற்கு தெரியாமல் இளந்தமிழகம் மற்றும் அதன் பிற முன்னெடுப்பு பெயர்களில்  நிகழ்வுகளையும் நடத்தினார்கள்.

அமைப்பு பொதுக்குழுவின்  முடிவுக்கு மாறாக, சனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட CPML கட்சியைச் சார்ந்த செந்தில், ஜார்ஜ், பரிமளா, பாலாஜி, பாரதிதாசன், ரபீக் மற்றும் அவரதுஆதாரவாளர்கள் தீபன், சதீஸ் உள்ளேட்டோரை நீக்கிவிட்டு, கடந்த சனவரி 14 தமிழ்ப் புத்தாண்டு முதல் இளந்தமிழகம் இயக்கம் மற்றும் ஃபைட் (சங்கத்தின்) அமைப்பு வேலைகளைத் தொய்வில்லாமல்இதுவரை செய்துவருகிறோம்.

இந்த இக்கட்டான சூழலில் கடந்த ஆறு மாதத்தில் எமது பணிகள் மிகுந்த வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்றன. அவற்றில் சில,

 1.      500, 1000 செல்லாக்காசு என்ற தலைப்பில் – கருத்தரங்கம்
 2.     சல்லிக்கட்டு போராடட்த்திற்கு ஆதரவாக 6 நாட்களாக டைடல் பூங்கா வாசலில் ஐ.டி. பணியாளர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்தது
 3. காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான நடுக்குப்பம் மற்றும் ரூதர்புரம் பகுதியில் ஐ டி பணியாளர்களை ஒருங்கிணைத்து கள ஆய்வு செய்தது மக்களை சந்தித்து அவர்களுக்கு பிற அமைப்புகளுடன் இணைந்து மருத்துவமுகாம் ஒருங்கிணைத்தது
 4.     பல்வேறு சனநாயக அமைப்புகளுடன் இணைந்து சிவகங்கை கிறித்தவ மறைமாவட்டத்தில் நடந்துவரும் தீண்டாமைக்கு எதிரான மக்கள் பொது விசாரணை
 5.     போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக டைடல் பூங்கா எதிரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தி கைது
 6.     போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு கட்சிகள், இயக்கங்களிடம் பெற்ற கூட்டறிக்கைக்கான முன்னெடுப்பு
 7.     அண்ணல் அம்பேத்கர் முன்வைக்கும் சனநாயகம் – அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கம்
 8.     ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பற்றி விரிவான விளக்க் கட்டுரை – விசை இணையத் தளத்தில் வெளியிட்டது. பல்வேறு சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்த கருத்தாய்வு கட்டுரைகள் விசை இணையதளத்திலும், இயக்கத்தின் அறிக்கைகள் இளந்தமிழகம் இயக்க இணையதளத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
 9.     சட்டவிரோத ஐ.டி. நிறுவனங்கள் செய்யும் வேலை நீக்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஃபைட் அமைப்பின் மூலம் ஒருங்கிணைப்பு. இந்தியா முழுக்க 100 -க்கும் மேற்பட்ட ஐ.டி ஊழியர்கள் எங்களுடைய FITE மன்றத்தின் மூலம் தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வளவு பணிகளுக்கிடையே CPML அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருக்கிற செந்தில் மற்றும் கட்சி ஆட்களின் அரஜாகத்தையும் எதிர்கொண்டு வருகிறோம். இரு தரப்புக்கும் ஒற்றுமை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகள் அமைப்பு உறுப்பினர்கள் மூலமாகவும், தோழமை இயக்கங்கள் என்று  பல கட்டங்களில் தோழர் கொளத்தூர் மணி, தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலையிலும்  நடைபெற்றன. ஆனால் அனைத்து பேச்சுவார்த்தைகளும்  தோல்வியில் முடிவடைந்தன. இறுதியாக தோழர் தியாகு, தோழர் ஓவியா முன்னிலையில் தி.வி.க. தலைமை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பொதுக்குழுவில் தங்களால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்றும், அதேநேரம் எங்களுக்கு ஃபைட் மட்டுமாவது வேண்டும் என்று பேரம் பேசினார்கள். ஒரு அமைப்பு பெயரை பெரும்பான்மை முடிவுக்கு மாறாக பயன்படுத்துவது தவறு என்கிற சனநாயகக் கோட்பாட்டை புறம்தள்ளிய இவர்கள் பொதுவுடைமை கட்சியை சார்ந்தவர்களா என்கிற ஐயம் எழுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்தபின் முறைப்படி பெரும்பான்மை தரப்பிற்கு இயக்கத்தின் கணக்கையும், அலுவலக சாவியையும் ஒப்படைக்காமல் கைப்பற்றி வைத்துள்ளது CPML கட்சி உறுப்பினர்கள் தரப்பு. CPML கட்சியைச் சார்ந்த, 2016 ஜனவரியில் அப்போதைய பொருளாளர் ஜார்ஜ் வங்கிக்கணக்கில் வந்த உறுப்பினர்கள் பங்களிப்பு மற்றும் சென்னை மழைவெள்ள நிவாரணப் பணம் ஐந்தரை இலட்சம்[மூன்றரை இலட்சம் தான் இருக்கிறதென்றும், 2 இலட்சம் அமைப்பு வேலைக்கு செல்வாகிவிட்டது போன செப்டம்பரில் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்குப்பின் சொன்னார், இதன் வட்டி உட்பட பலவரவுகள் இந்த வங்கிக் கணக்கில் மறைக்கப்பட்டுள்ளன], இளந்தமிழகம் இயக்க அலுவலகத்திற்கு கொடுத்த முன்பணம் ஒரு இலட்சம், அலுவலகத்தின் பயன்பாட்டிற்கு உறுப்பினர்கள் கொடுத்த 4இலட்சம் மதிப்பிலான பொருட்கள், அச்சிடப்பட்ட 5000க்கும் அதிகமான நூல்கள் என 10 இலட்சத்திற்கும் மேல் இன்று வரையில் சனநாயக விரோதமாக கைப்பற்றி வைத்துள்ளார்கள்.

அதோடு, ஒரு மாதத்திற்கு முன்பு FITE – தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றத்தையும், மக்கள் விடுதலை கட்சியைச் சார்ந்தவர்கள் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இவை மட்டுமின்றி மேலும் அமைப்பு மற்றும் சங்கத்தின் பெயரில் போலி மின்னஞ்சல், இளையத்தளம், சமூகவலை தளங்களை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் செந்தில் தலைமையில் செயல்படும் கட்சி ஆதரவாளர்களை கண்டிக்கின்றோம்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் CPML – மக்கள் விடுதலை கட்சி உறுப்பினர்கள் முறையாக இவற்றை ஒப்படைக்காத பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீண்ட காலத்திற்கு தற்காலிக குழு கட்டமைப்பில் இயங்க முடியாது என்ற காரணத்தால் அமைப்பின் பழைய வடிவத்தை மீள் அமைக்கப்பட்டு புதிய பொதுக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். கடுமையான காலகட்டத்தில் சிறப்பாக அமைப்பை வழிநடத்திய தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவிற்கு இந்த பொதுக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.

இளந்தமிழகம் இயக்கத்தில் தற்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள் விவரம்:-

 1.      சரவணக்குமார்
 2.     இளங்கோ
 3.     நற்றமிழன்
 4.     ஜெயப்பிரகாஷ்
 5.     தனஞ்செயன்
 6.     பிரவீன்ராஜ்
 7.     கண்ணதாசன்
 8.     இளஞ்செந்தில்
 9.     ஜோன்சன்
 10.   அருணகிரி
 11.    ராசன் காந்தி
 12.   அரவிந்தன்
 13.   தமிழ் நாசர்
 14.   சமந்தா
 15.   வினோத் களிகை
 16.   செய்யது
 17.   கதிரவன்
 18.   முனுசாமி
 19.   தீபக்
 20.  இராஜேஷ்
 21.   கமலக்கண்ணன்
 22.  சோபனா
 23.  துரை தமிழ்ச் செல்வன்
 24.  ராஜூவ்
 25.  இரா.சங்கர்
 26.  வசுமதி
 27.  கவாஸ்கர்
 28.  சி.ஆர்.பாலாஜி
 29.  பட்டுராஜா
 30.  சன்னி ஆரோக்கியதாஸ்
 31.   கிருபாகரன்

இளந்தமிழகம் இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனிக்க,

ஒருங்கிணைப்பாளராக ராசன் காந்தி (9382809204)

செய்தித்தொடர்பாளராக வினோத்களிகை (9489004259)

பொருளாளராக ஸ்ரீ சரவணகுமார் (9840090898)

அமைப்பின் இதர பொறுப்பாளர்கள் விபரம் பின்வருமாறு: – 

இணையதள செய்தித்தொடர்பாளர் – இளங்கோ  

மதுரை உள்ளிட்ட தெற்கு மாவட்ட பொறுப்பாளர் – அரவிந்தன் (9791143693)

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பொறுப்பாளர் – நற்றமிழன் (9566674021)

பெங்களூரு பொறுப்பாளர் – கதிரவன் (884123382)

தகவல் தொழில்நுட்பப பணியாளர்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பப பணியாளர்கள் மன்றத்தின் தலைவர்  வசுமதி (9487485266)

தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 9 ஆண்டுகளாக எமது இளந்தமிழகம் இயக்கத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்துவரும் எமது இயக்க உறுப்பினர்களுக்கும், துணைநிற்கும் தோழமை அமைப்பு நண்பர்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து எங்களது கொள்கை அறிக்கையின் வழியிலும், அமைப்பு சட்டவிதிகளின்அடிப்படையிலும் தமிழ்நாட்டில் மிகப்பெரும் சமூக அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர, தமிழக இளைஞர்களுக்கான ஒரு வலுவான அமைப்பாக இளந்தமிழகம் இயக்கத்தை உருவாக்குவோம் என்பதை உறுதியுடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்கிறோம்.

– இளந்தமிழகம் இயக்கம்

03.07.2017

ilanthamizhagam03072017-1 ilanthamizhagam03072017-2 ilanthamizhagam03072017-3 ilanthamizhagam03072017-4 ilanthamizhagam03072017-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>