சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை தொழில்நுட்பப் பணியாளர் மன்றம் – ஃபைட் [Forum for IT Employees – FlTE] அமைப்பை அதன் நிர்வாகக் குழு, பொதுக்குழு, உறுப்பினர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்ய முற்பட்டது அறிந்து முதற்கட்டமாக முறியடிப்பு !

 

நாள் : 01.06.2017

சென்னை

 

 

                                   பத்திரிகை செய்தி

 

 

இளந்தமிழகம் இயக்கம் பெரும்பான்மையாக தகவல் தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்ட இயக்கமாகும். இளந்தமிழகம் இயக்கத்தால் 2014 ஆம் ஆண்டு இறுதியில்  தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம் (இனி – மன்றம்) (FITE – Forum for IT Employees)  உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்திலும், இயக்கம் உருவாக்கிய மன்றத்திலும் ((F.I.T.E ) கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மக்கள் விடுதலையைச் சேர்ந்த செந்தில், ஜார்ஜ், பரிமளா, பாலாஜி,பாரதிதாசன் உள்ளிட்ட சிலர்  ஊடுருவி இருந்தனர். இவர்கள் அனைவரும் இளந்தமிழகம் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால் இவ‌ர்கள் இளந்தமிழகம் இயக்க அலுவலகத்தை கைப்பற்றி வைத்துள்ளனர்.

பரிமளா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ.மக்கள் விடுதலையின் தொழிற்சங்கமான – சனநாயக தொழிற்சங்க மையத்தின் (D.T.U.C) செயற்குழுவிலும், கட்சியின் மையக் குழுவிலும் உள்ளார். அதே போல பாலாஜி, பாரதிதாசன், தீபன், இனியவன்,  சதீஷ் மோகனகிருஷ்ணன் ஆகியோர் அக்க‌ட்சியின் மறைமுக உறுப்பினர்களாகவும் இருப்பது மன்றத்திற்கு(F.I.T.E) தெரிய வந்ததால் இவர்கள் அனைவரையும் மன்றத்திலிருந்து (F.I.T.E) நீக்கிவிட்டோம்.  இதன் பின்னர் புதிய தலைவர், செயலாளர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கான மன்றம் (F.I.T.E ) எந்த கட்சி சார்புமின்றி தற்போதைய பணி நீக்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது.

நாங்கள் தான் சென்னை, பெங்களூர், புனே, ஹைத்ராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் காக்னிசென்ட், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பணி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றோம். ஆனால் நாங்கள் செய்து வரும் இப்ப‌ணியைக் கூட தாங்கள் தான் செய்து வருகின்றோம் என கட்சி சார்பு பரிமளா குழு ஊடகங்களில் பொய் சொல்வதை கண்டிக்கின்றோம்.

இளந்தமிழகம் இயக்க‌ அலுவலகத்தில் தான் மன்றம்(F.I.T.E) தொடங்க நாங்கள் வைத்திருந்த ஆவணங்கள் எல்லாம் இருந்தன. இந்த ஆவணங்களை எடுத்து கொண்டு பரிமளா, பாலாஜி, பாரதி உள்ளிட்டோர் மன்றத்தை தங்கள் பெயரில் பதிவு செய்ய திட்டமிட்டு ஆவணங்களை தொழிலாளர் நல ஆணையத்தில் கொடுத்துள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. இதனை தடுக்கும் நோக்கில் உண்மையை விலக்கி எழுதப்பட்ட அறிக்கையை குறளகம், தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்களில் இன்று (ஜீன் 1,2017) கொடுத்துள்ளோம்.

தொழிலாளியின் உழைப்பு சுரண்டப்ப‌டுவதை எதிர்த்து தொழிலாளிக்கு உரிய உரிமைகளை பெற்றுத்தருவது தான் தொழிற்சங்கத்தின் பணி. ஆனால் உடன் பணிபுரிந்த தோழர்களின் உழைப்பை திருடி இவர்கள் தொடங்கும் தொழிற்சங்கம் முதலாளிகளின் கைப்பாவையாகத் தான் செயல்படும் என்பது இப்பொழுதே வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. இவர்களை எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றத்தின்  (F.I.T.E) அதிகாரபூர்வமான தகவல்கள் எல்லாம் எமது இணையதளமான  fite.org.in  வெளியிடப்படும். மன்றத்தின் அலுவலக முகவர்களின் பட்டியல் தொடர்பு எண்ணோடு மேற்கண்ட எங்கள் இணையதளத்தில் இருக்கின்றது.  இன்னும் ஓரிரு வாரத்தில் மன்றத்தை (F.I.T.E) தொழிற்சங்கமாக பதிவு செய்யும் பணியை நாங்கள் தொடங்கி விடுவோம் என்பதையும் உங்களுக்கு தெரிவிக்கின்றோம். தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஊடகத்துறையினரான உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

வசுமதி

தலைவர்

தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கான மன்றம் (F.I.T.E)

மனுவின் நகல் கீழே தங்கள் பார்வைக்கு

1

2

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *