நினைவஞ்சலி செய்ய தடைவிதிக்கும் மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செய்ய தடைவிதிக்கும் மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

 

2008 ல் ஆரம்பித்து 2009 மே மாதம் நடுப்பகுதியில் கொடுரமாக சிங்கள இனவெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட இன அழிப்பு போரில் ஒன்னரை லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது இங்கே இந்தியாவில் இருந்த மத்திய, மாநில அரசுகள் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக கடுமையான அடக்குமுறைகள் மூலம் தன்னெழுச்சியான‌  போராட்டங்களை ஒடுக்கின, இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்தும் காப்பாற்றின‌. போர் முடிந்து 8 வருடங்கள் ஆன பின்பும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் இன்னமும் அடக்குமுறைகள் தொடர்கின்றன். பக்க சார்பற்ற சர்வதேச விசாரனை இன்னமும் ஆரம்பிக்கபடாமலேயே உள்ளன.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது தமிழர் மரபு. ஆனால் 8 ஆண்டுகள் கடந்த பின்பும் ஈழப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்த கூட இந்திய ஆட்சியாளர்கள் அனுமதியை மறுக்கின்றனர், தடைவிதிக்கின்றனர்.

சென்னை மெரினாவில்  மே 21 ந்தேதியன்று முள்ளிவாக்கால் நினைவேந்தல் நடத்த, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கூடிய பல்வேறு  இயக்கத்தோழர்களை தாக்கி, கைது செய்திருக்கிறது காவல்துறை. தோழர்கள்மீது அடக்கு முறையை ஏவியுள்ள அதிமுக அரசையும், அதிமுக-வை கைப்பாவையாக வைத்து தமிழர் உரிமைகளை நசுக்கும் மத்திய பிஜேபி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்,  இலங்கை புரிந்த இனப்படுகொலைக்கு எதிரான பக்க சார்பற்ற சர்வதேச விசாரனைக்கும், பொதுவாக்கெடுப்பு மூலம் ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா அரசு அனைத்துலக மன்றங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இளந்தமிழகம் இயக்கம் வலியுறுத்துகின்றது.

– இளந்தமிழகம் இயக்கம்

ஒருங்கிணைப்பு குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *