இளந்தமிழகத்தின் புதிய ஒருங்கிணைப்பு குழு

அனைவருக்கும் வணக்கம்,

2008 ஈழப்போர் காலக்கட்டத்தில் ஐ.டி. துறை ஊழியர்கள், நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து “STOP WAR; SAVE TAMILS” என்னும் முழக்கத்துடன் போரை நிறுத்த பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் தொடர்ச்சியாக SAVE TAMILS என்னும் பெயரிலேயே இயக்கமாக செயல்பட ஆரம்பித்தோம்.

ஈழப் போராட்டம், கூடன்குளம், மீத்தேன், முல்லைப் பெரியாறு, காவிரி உரிமை உள்ளிட்ட தமிழக உரிமைப் பிரச்சனைகள், சிறுபான்மை பெண்கள் மீதான கொடுமைகள், சாதிய வன்கொடுமைகள், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக, என போராடும் மக்களின் நியாயங்களின் பக்கம் நின்று கருத்துருவாக்க தளத்தில் செயல்பட்டு வருகிறோம். விகடனின் 2012ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கைகளில் இடம் பிடித்த பெருமையும் சேவ் தமிழ்ஸ் இயக்கத்திற்கு உண்டு.

கடந்த 2014 ஜூலை 13 முதல் இளந்தமிழகம் இயக்கம் என பெயர் மாற்றி செயல்பட்டு வருகிறோம். www.visai.in என்ற செய்தி இணையதளத்தை நடத்தி வருகிறோம்.

இந்நிலையில், இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள உறுப்பினர்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) – CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) என்னும் கட்சியினர் சிலர் எங்கள் இயக்கத்தின் நிர்வாகம், இயக்கத்தின் ‘ஐ.டி. ஊழியர்கள் தொழிற்சங்கமான’ ‘ஃபைட்’ நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியான முடிவுகளில் தலையிட்டு வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டோம். அவ்வாறு செயல்பட்டது இளந்தமிழகம் இயக்கத்தின் வளர்ச்சியை பெருமளவில் பாதித்துள்ளது.

மேலும், தன்னெழுச்சியாக உருவான இவ்வியக்கத்தை தங்களின் உறுப்பு அமைப்பு என CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சி அரசியல் தளங்களில், ஊடக நண்பர்களிடம் உண்மைக்குப் புறம்பாக பரப்பிய செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சி உள்ளிட்ட எந்த ஒரு கட்சியின் சாயமும் இளந்தமிழகம் இயக்கத்திற்கு தேவையற்றது, ஒரு கட்சியின் சார்பாக வேலை செய்வது இயக்கத்தின் வளர்ச்சிக்கும் தடையானது.

இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக, CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சி உட்பட எந்தக் கட்சியின் தலையீடும் இளந்தமிழகம் இயக்கத்திற்குள் இருக்கக் கூடாது என்றும், இயக்கத்தின் பொதுக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வேறு அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்றும் 2016 ஜூன் 12, 26 பொதுக் குழுவில் ஒரு மனதாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

ஆனால், அதன் பிறகும் CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சியின் தலையீடுகள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் இளந்தமிழகம் இயக்க செயல்பாடுகள் முடங்கியுள்ளது. மேலும் கடந்த 6 மாத காலமாக பொதுக்குழு மடல் குழு மற்றும் வாட்ஸப் குழுவில் விவாதங்கள் அரசியலைத் தாண்டி மிகக் கேவலமான தனிநபர் தாக்குதலாக சென்றுகொண்டிருக்கின்றன. செயற்குழுவும் கடந்த 3 மாதகாலமாக செயல்படாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேசத்தின் முக்கிய அரசியல் பிரச்சனைகளுக்கும் ஒருமித்த இயக்கமாக செயல்பட முடியவில்லை.

இதனைத் தீர்க்கும் முகமாக நவம்பர் 19 பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் 26 பொதுக்குழு முடிவை நடைமுறைப்படுத்தவும், புதிய ஒருங்கிணைப்புக் குழு மூலம் இயக்க செயல்பாடுகளை வழிநடத்தவும் முடிவெடுத்துள்ளோம். எந்த ஒரு கட்சியின் சாயமும் இன்றி, தனது கொள்கை அறிக்கையின்படி இளந்தமிழகம் இயக்கம் தனி அடையாளத்துடன் தொடர்ந்து செயல்படும்.

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இளந்தமிழகம் இயக்கத்தில் (அன்றைய “சேவ் தமிழ்ஸ்” இயக்கம்) அரசியல், அமைப்புமுறை மீறல் மற்றும் தலையீடுகளில் ஈடுபட்ட CPML மக்கள் விடுதலை (தமிழ்நாடு) கட்சியினரை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அக்கட்சியில் இரகசிய உறுப்பினர்களாகவும், தலைமைப் பொறுப்பிலும் செயல்பட்டு வந்த இளந்தமிழகம் இயக்கத்தின் Office Bearers, செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உறுப்பினர்களாக இளந்தமிழகம் இயக்க வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு, தை 1 2048 (சன 14, 2017) முதல் புதிய ஒருங்கிணைப்புக் குழு இளந்தமிழகம் இயக்கத்தை வழிநடத்தும் என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறோம். இந்த ஒருங்கிணைப்பாளர்கள் இயக்கத்தின் கொள்கை அறிக்கைபடியும், பொதுக்குழுவில் தீர்மானித்த செயல்திட்டத்தின்படியும் கூட்டுத் தலைமையாக வழிநடத்துவார்கள்.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள்:

1) சரவணக்குமார்

2) ஜெயப்பிரகாஷ்

3) பிரவீன் ராஜ்

4) வசுமதி

5) இளஞ்செந்தில்

6) அரவிந்தன்

7) தீபக்

8) தனஞ்செயன்

புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், இளந்தமிழகம் இயக்க செயல்பாடுகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவைத் தரும்படி இளந்தமிழகம் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தோழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

​இளந்தமிழகம் இயக்கம்
#42/21, மேட்டுத் தெரு,
வேளச்சேரி, சென்னை – 42.
தொடர்புக்கு: 8939661119.​
Notice: compact(): Undefined variable: limits in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/class-wp-comment-query.php on line 853 Notice: compact(): Undefined variable: groupby in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/class-wp-comment-query.php on line 853
Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382

Leave a Reply Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382

Your email address will not be published. Required fields are marked *