சென்னை, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளில் இளந்தமிழகம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை: செய்தி அறிக்கை

இளந்தமிழகம் இயக்கம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை இணைந்து கடந்த 13 நவம்பர் தொடக்கம் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இப்பணிகள் தொடர்பாகவும், தொடரும் நிவாரணப் பணிகள் முறையாக மக்களுக்கு சென்றடைய ஊடகங்களின் ஆதரவைக் கோரியும் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை கீழே,

வெள்ளப் பேரிடர் மீட்பு பணியில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலையும், இளந்தமிழகம் இயக்கமும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறோம். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குழுக்களும் பகுதி மக்களும் இணைந்து வருகிறார்கள். இந்த மீட்புப் பணியில் கடந்த முதல் மழை வெள்ள காலத்திலிருந்தே (நவம்பர் 13) ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட, முழுவதும் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டப் பகுதிகளை நோக்கி முதன்மையான கவனத்தைச் செலுத்தி வருகிறோம். சென்னையில் அடையாறு கரையோரம், கூவம் கரையோரம், கண்ணகி நகர் , செம்மஞ்சேரி, கல்லுக்குட்டை உள்ளிட்ட குடிசை பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த பணியில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து உடனடி நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். தற்பொழுது கோடம்பாக்கம் அரசு பள்ளியை ஒட்டி முகாம் அமைத்து நாடு முழுவதும் இருந்து பொருட்களைப் பெற்று நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். இதை மேலும் சிறப்போடு செய்வதற்கு உங்களுடைய செய்தி ஊடகத்தின் உதவி தேவைப்படுகிறது. பொருட்கள் எந்த பகுதிகளுக்கு தேவை என்ன தேவை என்று குழுக்களை அமைத்து தகவல் சேகரித்து அதனடிப்படையில் நாங்கள் திட்டமிட்டாலும் நடைமுறையில் பல பகுதிகளில் வெவ்வேறு குழுக்களும் ஒரே பொருட்களை மக்களுக்கு அளிப்பதால் உரிய மக்களுக்கு உரிய நிவாரணப் பொருட்கள் போய் சேர்வதில் பெரும் குழப்பம்தான் நிலவுகிறது. இக்குழப்பத்தைத் தவிர்க்க உதவி செய்கின்ற குழுக்களிடையே ஒரு வலைபின்னலை உருவாக்க வேண்டியுள்ளது. எங்கள் நிவாரணப் பணி மற்றும் முகாம் குறித்த தகவலை பிரசுரித்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி!!!
பாலன் +91 90927 32614
பொதுச் செயலாளர்,
கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை.

செந்தில் +91 99419 31499
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai_Relief2

chennai_relief_work15

chennai_relief_work2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *