“அமைப்புக் கண்ணோட்டமும் அதன் தேவையும்” சிறப்பு வகுப்பு

நேற்று (19-செப்-2015) காலை இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்களுக்காக “அமைப்புக் கண்ணோட்டமும் அதன் தேவையும்” என்ற தலைப்பில் சிறப்பு அரசியல் வகுப்பு நடைபெற்றது. இளந்தமிழ்கம் இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வகுப்பின் ஆசிரியர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் ச. தமிழ்செல்வன்.

ஒரு சமூகத்தின் பலம் அதன் அமைப்பு வலிமையே. மக்கள் அமைப்பாக்கப்பட வேண்டும். அமைப்பில் சேரும் ஒரு நபருக்கு அமைப்புக் கண்ணோட்டம் இருந்தால்தான் அவர் செய்யும் ஒரு சிறு வேலைகூட அதன் உண்மையான விளைவுகளைக் கொடுக்கும். அமைப்புக் கண்ணோட்டத்திற்கு தனிநபர்வாதம், தாராளவாதம், சனநாயக மறுப்பு போன்ற பல போக்குகள் தடையாய் உள்ளன.  இந்தப் பின்னணியில் அமைப்புக் கண்ணோட்டம் பற்றிய தேவையை வலியுறுத்தி   இந்த அரசியல் வகுப்பு இயக்க உறுப்பினர்களுக்காக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

இந்த வகுப்பில், மனித மனதை தகவமைகின்ற 5 முக்கிய ‘பண்பாட்டு கட்டமைப்புகளான’ ஆன குடும்பம், கல்விச் சாலை, சாதி, மதம், ஊடகம் குறித்தும் அவற்றால் உருவாக்கப்படுகின்ற போலி மதிப்பீடுகளை உடைக்காமல் மாற்றங்களை உருவாக்க முடியாது என்பதையும் அவ்வாறு அவற்றை உடைக்கின்ற போது ஏற்படுகின்ற வெற்றிடத்தையும் உளவியல் மாற்றங்களையும் எவ்வாறு கையாள வேண்டும் என்று தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்தே தோழர் ச. தமிழ்ச்செல்வன் எடுத்துக் கூறியது சிறப்பாக அமைந்தது. அவரது எழுத்துக்களைப் போலவே அவரது பேச்சும் எளிமையானதாக அமைந்திருந்தது.

இந்த வகுப்பின் முழுக் காணொளி விரைவில் பகிரப்படும்.

 

12036463_1015358105162663_4654558789903178984_n


12004882_1015358335162640_105262961628652565_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *