டி.சி.எஸ். ஊழியர்கள் கவனத்திற்கு!

Deprecated: Function create_function() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-content/plugins/wp-spamshield/wp-spamshield.php on line 2033

ஐ.டி.துறையில் பணிபுரியும் ஊழியர்களே,

டி.சி.எஸ். (TATA CONSULTANCY SERVICES) நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியுள்ளதை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் (1.HindustanTimes 2.The Economic Times).  நீங்களோ அல்லது உங்கள் நண்பர்கள் யாரோ கூட இதனால் பாதிக்கப்படப்போகிற ஆளாக இருக்கலாம். பெருநிறுவனங்கள், தங்கள் இலாபத்திற்காக எடுக்கும் எத்தனையோ ‘சிக்கன'(?) நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தச் செய்தி வெளியிடப்படலாம் அல்லது புதிதாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக விளம்பரப்படுத்தப்படலாம்.

நம்முடைய நண்பர்கள் வட்டாரத்திலேயும் இதுபற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், கையறு நிலையில் இருக்கும் நமது சக ஊழியர்களைப் பற்றியது. சிலருக்கு, பணியில் கடைசி நாள் குறிக்கப்பட்டு, விருப்பப்  பணி விலகலாகவோ அல்லது  பணி நீக்கமாகவோ வழங்கப்பட்டுவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். இதற்கு முன்னமே பல நிறுவனங்களில் இதுமாதிரி பணிநீக்கச் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்துகொண்டேயிருந்தாலும், இப்போதைய எண்ணிக்கையானது மிகப்பெரியதாகவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கையை அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.

நம்முடைய பணி சூழல் குறித்து நான் ஏற்கெனவே சில கடிதங்களை ஐ.டி. ஊழியர்களான உங்களுக்கு எழுதியிருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அந்தக் கடிதங்கள் உங்களுக்கு வாசிக்கக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். இதோ அந்தக் கடிதங்களுக்கான சுட்டிகள்….

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 1

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 2

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 3

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 4

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு ! – 5

வழமையாக, மேலாளரின் அறைக்கு அழைத்து பணிநீக்கம் செய்யப்படும் தகவல் தெரிவிக்கப்படும். அப்போது நாம் விருப்பப்பட்டு பணியைவிட்டு விலகுவதாக கையொப்பம் பெறப்படும். அதற்கு, கையொப்பமிட மறுத்து, காரணம் கேட்ட நம்முடைய சக தோழி பெங்களூரைச் சேர்ந்த ஷீலா நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மகளிர் ஆணையத்தை அணுகுவது என முடிவு செய்து, கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார் ஷீலா.  அவரது புகாரை விசாரித்த மகளிர் ஆணையம், புகாரை தொழிலாளர் நலவாரியத்திற்கு மாற்றியது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 15 அமர்வுகளாக வழக்கை விசாரித்தது தொழிலாளர் நலவாரியம். முதலில் இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்க  நிறுவனம் பின்னர் 10.55 லட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலையை வாரியத்திடம் அளித்துள்ளது.  காசோலையை வாங்க மறுத்து நம் தோழி ஷீலாவின் போராட்டம் தொடர்கிறது. (இது பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளோம்).

இதுபோன்று, (தகுந்த காரணமின்றி) கட்டாயப்படுத்தி பணியிலிருந்து விலகச் சொல்லும்போது, ‘தொழில் தகராறுகள் சட்டம் 1947-ன்'(Industrial Disbutes Act – 1947) படி நிறுவனம் விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், ஷீலா போன்று, சட்ட உதவியை நாம் நாடமுடியும்.

TCS layoff

நீங்களோ, உங்களது தோழன் அல்லது தோழியோ TCS-ல்(அல்லது மற்ற நிறுவனங்களிலோ) எழுந்துள்ள இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறீர்கள் எனில், எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒன்றிணைவோம்!

நம்மைப் பாதுகாத்து கொள்ள, நம் உரிமைகளைப் வென்றெடுக்க நாம் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயமும், இன்றைய தேவையும் கூட.

Follow the latest updates in FB:

https://www.facebook.com/AgasintTCSLayOff

English version of this article:

Attention TCSers !

(நீங்கள் கொடுக்கும் தகவல்கள் வேறு யாரிடமும் பகிரப்பட மாட்டாது!)
பேச: 98407 13315

Send your e-mails to fiteorg @ gmail.com
Check the F.I.T.E. Website for more details: fite.org.in
Join FITE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *